
முன்பனி புடைசூழ
மூழ்கி குளித்து,
முன்னிரவு கனவு மறந்து,
விரல் தொடும்
பனி ஓட - உருதிடும் உடலென,
மெல்லத்தான்,
தொட்டு துடைக்க...,
"சோ! வென்று
கொட்டிய மழையில்,
பூ விதழ் தாங்காது -
உடல் மெலிந்து , வளைந்து ,
பிரியும் போது
வாசத்தையும்
துளியோடு சேர்த்து,
தவறவிடும் - சோகத்தில்,
ஆடி அசைந்து,
விடை கொடுக்கும்
ஒரு துளியாய்,"
ஓடி வந்தது
அவள் கண்களில் ....
"நானும் விடைகொடுக்க பட்டேன்" ........
"காதலை மட்டும் சுமந்து".......

No comments:
Post a Comment