Sunday, December 27, 2009

காதலின் கடைசி துளி ..,


முன்பனி புடைசூழ
மூழ்கி குளித்து,

முன்னிரவு கனவு மறந்து,
விரல் தொடும்
பனி ஓட - உருதிடும் உடலென,
மெல்லத்தான்,
தொட்டு துடைக்க...,

"சோ! வென்று
கொட்டிய மழையில்,
பூ விதழ் தாங்காது -
உடல் மெலிந்து , வளைந்து ,
பிரியும் போது
வாசத்தையும்
துளியோடு சேர்த்து,
தவறவிடும் - சோகத்தில்,
ஆடி அசைந்து,
விடை கொடுக்கும்
ஒரு துளியாய்,"

ஓடி வந்தது
அவள் கண்களில் ....

"நானும் விடைகொடுக்க பட்டேன்" ........
"காதலை மட்டும் சுமந்து".......

Friday, December 25, 2009

அனாதை




உயிரோடு நான் வாழ
உதிரத்தை கருவாக்கி
உயிர் கொடுத்த தாயே...,
கருவில் நான் - வாழ,
கவலையோடு நீ - வாழ,
- அதிகமாக உதைதேனோ - அம்மா?

மண்ணில் வீழ்ந்த என்னை,
மடியில் தாங்காமல் - வெருத்ததேனோ?
- கறுப்பாக இருந்தேனோ - அம்மா?



மார்போடு எனை தாங்கி
கள்ளிப்பால் கொடுத்தாலும்
விஷமென்று தெரிந்தாலும்
விரும்பியே கலம் பால் குடித்திருப்பேன்,
தொட்டிலில் எனை போட்டு
தூரசென்றாயே - அம்மா,
நான் செய்த குற்றமென்ன?

கொஞ்சி விளையாடும் வயது,
கொஞ்சிட நீ - யில்லை
கவலையோ, களிப்போ
கொஞ்சமும் - என்
நெஞ்சில் - ஈரமில்லை...,

மரத்து போன மனமாய்
மன்றாடி வேண்டுகிறேன் ...,

காலம் - எனை கடக்குமுன்பே,
என் எதிரே நீ வேண்டும்,
அன்று உன் மடியிலேயே
என் உயிரும் ....

Friday, December 18, 2009

"ஒரு ஞானியை போல்"
மழைநீருக்கு காத்திருக்கும்
விதைபோல்...
காதலிக்க தயாராகிவிட்டேன்...
"காத்திருக்க
கற்றுகொண்டேன்"
மறு ஜென்மம்
எப்போது?....

Thursday, November 26, 2009

வருத்தம்


இலைகளை
உதிர்த்து விட்டேன்,
பருவகாலம்
மாறுமென்று...
கிளைகளை
மடக்கி வைத்தேன்,
தூறல் கண்டால்
துளிர்துவிடலாமென்று ...
பாலுட்டா பாவியாக
தாய் - தன்னை
கூறாமல்
தவிர்த்து விட்டேன்
விதைகளை...
உள்ளிருக்கும்
வேர்களை
என்ன செய்ய
உயிர்பிக்க...

எழுச்சி


சிந்திய கண்ணீர்
சேமித்தால் போதும்,
சிந்து நதியில்
சிக்கதா முத்து - என்
செம்மண்ணில்
விளையும்..,
சிந்தித்து பார்...,
மணல் குவித்து
மண்டியிட்டு
மன்றாடுகிறாயே
காவேரியில்...,
கால்வாயை வெட்டு
தலை நகரில்
உன்னும் போது
உணர்வார்கள்
கரிக்கும் - நெல்
கண்ணீரில்
விளைந்ததேன்று ...

பிரிவு


பிரிவின்
கொடுமையை
உணர்கிறேன்...
உன் - நினைவை
சுமந்த
ஒவ்வொறு
நிமிடமும்...
மறைந்து விடு
பெண்னே...,
இமை மூடா
வலிக்கிறது
கண்கள்...,
தங்க மணல்
தரணிக்கு
தவழ்த
நிலவோடு - நின்
பாதமும்...,
விழ்ந்த
அலைகளில்
இதையங்கள்
தடுமாறி
இடம்மாறி
திரும்பினவோ...,
உன்னோடு
சேரும் வரை
உலகில் தேவை
ஒன்றும் இல்லை...,
உன்னை தவிர
உலகே தேவை
இல்லை...,


அந்தரத்தில்
அழகாக சிரிக்கின்றாய் - நிலவே ...,
நி - யாரையும்
காதலிக்கவில்லையா?...,

நம்பிக்கை


பிரிவென்பது ஏது...,
"ஒன்று சேர்த்து விடுவோம்."
காதல் வாழும்
கடற்கரையில்...,
அலைகளோடு,
அலைகளாக...,

வறுமை

தேயும் நிலவு கூட
திரும்பும்
திங்களுக்கு திங்கள்
தேன் நிலவாக ..,
கதிரவன் கரையும் நேரம்
என் உடலோடு
உடன் பிறந்த - என்
நிழல் கூட மறையும் ...,
என்றுதான் நீங்குமோ?
மண்ணை விட்டு பிரிந்தால் தான்
என்னை விட்டு
மறையுமோ!!!


எந்தன் வறுமை....,

தொட்டு கொடு
அஸ்தியை,
துளி கண்ணீரால் ...,
புனிதமாகட்டும்
எந்தன் காதல்...,

ஆசை

பூத்து குலுங்குகின்றன
பட்ட மரத்திலும்
ஒட்டி கொண்டிருக்கும்
பனி துளியாய்....
எங்களின் ஆசைகள்....

வரம் கொடு

ஒரு கோடி இரவுகள்
மடி தூங்க ...
கலைத்து விடாதே
கனவுகளை....

Thursday, July 16, 2009

தனிமை



கொலை குற்றவாளியோ?
தேசதுரோகியா
என் எப்படி?
அனாதையாக ....

தனிமையை கட்டிக்கொண்டு
ஜன்னல் - வழி பார்த்து,
நொடி நகர
நூறுமுறை கடிகாரம் பார்த்து
அப்பப்பா...,

தூக்கில் போடு
துடிக்கும் நேரம் மட்டும் வலி ....,

எனக்கோ,
கருப்பு துணி போர்த்தி
கழுத்தில் கயிர் போட்டு
காத்திருக்க முடியவில்லை....,

நினைஉகளால் மெழுகானேன்













தீபம் அணைந்தது ...,
இருள் சூழ்ந்தது,
"தீபமும் இல்லை
ஒளியும் இல்லை..., "
ஆனாலும்,
இப்போதும்
உருகுகிறேன்....

Wednesday, July 15, 2009

காதல்

அழிய போவது தெரிந்தும்
காத்து நிற்கிறதே -
கதிரவனுக்காக...,
பனித்துளிகள் ....,

Tuesday, July 14, 2009

செய்யா உதவி

மாலை வந்தால் மரணம்,
மண்டியிட்டு கேட்டது -
" பறித்து விடு
பறித்து எடுத்து விடு"
- ஏதாவது ஒரு தேவதையின்
கூந்தலில் சேர்..,
"என்னையும்
புண்ணியமடைய செய் ... "
தென்றலில் -
இதழ்கள் பேசியது ....,

தேவதைக்கு எங்கு செல்ல ...
"ஒருத்தி இருந்தாள்,
உயிரில் கலந்தாள்,
சுவடுகள் மட்டும் தந்து,
பாதை விலகி நின்றால் ...,

நினைவுகளோடு - நான்
நிலவாகவே - அவள்,
பாவியானேன்...., "

- இவன் கைபட்டால் ...,

உன் தேகம் கருக்கும்,
நீ - யும், என்னை போலவே
நன்றாக சிரிப்பாய்,
நடை பிணமாகவே ...

மன்னித்து விடு என்னை ......