Saturday, February 5, 2011

தாய்மை

சுகத்தில் பெற்ற
ஸ்வர்ணமே,

உன்னை பெற -
நான் பெற்ற
உணரமுடியா
துன்பங்கள்,
அத்தனையும் - மண்டியிட்டு...,

கட்டி நீ தந்த,
கண்தெரிய
முத்தத்தில் -
அத்தனையும்
சுகமேவியாய்...,

உந்தன் -
பட்டு மேனி
தொட்டு
உணர்கிறேன்,
எந்தன்
தாய்மையை...,

காதலோடு நானும் என் நிழலும்

துயில் களைந்து
துரசென்றாய்,
உனக்கு தெரியாமலே,
உன் பின்னே
தொடர்ந்தேன்...,

மறையும் சூரியனை
மனதிற்கு உணர்த்த
உன் எதிரே
மௌனமாய் நின்றேன்...,

என்னை நீ
மிதித்தாலும் - உன்
பாதம் தானே எனக்கு
புகலிடம்...,

நீ - சிரித்தல் மகிழ்கிறேன்,
அழுதால் கரைகிறேன்,
நனைந்தால் மறைகிறேன்,
வெறுத்தல் உறைகிறேன்...,

உன் விழிகள்
என் முகம் காண,
என்னை மறந்து
தலை சாய்கிறேன்
வெட்கத்தில்...,

உன்னோடே வாழ்கிறேன்,
உன்னை தொடர்ந்தே
வருகிறேன்...,
என்றென்னை - கண்கொண்டு
காண்பாயோ...,
என் காதலை,
என்று - நீ
உணர்வாயோ...,
உன் இதயத்தில்
என்று - நீ
இடம் தருவாயோ...,

உன் உடல் மட்டும்
உறங்குமோ,
அன்றும்,
உன் அழகை
ரசித்தபடியே,
உன் மடியில்
நான் மட்டும்...,

Saturday, January 29, 2011

தந்தை

தோளிலும் மார்பிலும்
தூங்காத - என்னை
சுமந்து
எத்தனை இரவுகள்
நடந்தாயோ...,

மார்பில்
உதைத்த
கால்களுக்கு
முத்தமிட்டு
சிரிப்பாயே...,

உள்ளதை,
ஊட்டிவிட்டு
வயிற்றில்
என்னை சுமந்து
தூங்க வைத்தாயே..,

கட்டியணைத்து
தூங்குவது போல்
பாதி காச்சலை
பக்குவமாய்
திருடுவாயே...,

பட்டடை
எனக்குடுதி - நீ
பழைய துணியோடு
ரசிப்பாய்யே...,

சிந்திய வியர்வை
துளிகளுக்கு...,
அழகழகாய்
பொம்மைகள் - வாங்கி
என் சிரிப்பில்
இளைப்பாருவாயே...,

மண்ணில் - நான்
வீழுந்த - நாள்முதல்
எத்தனை
சுகங்கள்
இழந்தையோ
எனக்காக...,

என்ன தவம்
செய்தேனோ,
தந்தையென
உங்களை பெற...,

மார்பில் சுமக்க
தவறிய நான்
மனதில் சுமக்கிறேன்
குழந்தையாக...,



என் இந்தியா

வல்லரசை
நோக்கி
இந்தியா...,

இன்னும்
குடில் இன்றி
தெரு புழுதியிலே
புரளும் புழுக்களோடு
புழுக்களாய்....,

உடுத்தினால் தானே
மாற்ற - இன்னும்
மாற்றக்கூட
வழி இல்லாத,
இடுப்பு கயிறோடு - மட்டும்
எத்தனையோ
மக்கள்...,

அடித்து செல்லும்
ஆங்கில - மோகத்தில்
அம்மா - என்றால்
அழுகிறாள்...,

கஞ்சிக்கே
வழி யில்லா
அவளுக்கு - எப்படி
பால் சுரக்கும்?.....,
முதற்பார்வைலேயே,
முழமையாக
இழந்துவிட்டேன்
என்னை...,

உனக்காகவே
எந்தன் சுகங்கள்
மாற்றப்பட்டன,
உனக்கு தெரியாமலேயே...,

நான் செதுக்கிய
வார்த்தைகளுக்கு
சிலையானாய்...,

என்ன செய்வேன்,
மௌனமனாலும்
உன் நினைவில்
மனம் வாடுகிறது...,
பொய்யான
பெயர் சூட்டி
அழைத்திடவே,
எவருமறிய
புன்னகையை
எனக்குமட்டும்
தருவாயே...,

எனக்கெப்படி
தெரியும்
பொய்யான
புன்னகையென்று...,

என்னுயிர்
உன்னை தொடர்ந்து
வந்தது,
பாவம்
உனக்கெப்படி
தெரியும்...,

இங்கே காதல் மட்டும் வாழ்கிறது

என்னவளை
இழந்து
இன்னமும்
உயிரோடு...,