Thursday, November 26, 2009

வருத்தம்


இலைகளை
உதிர்த்து விட்டேன்,
பருவகாலம்
மாறுமென்று...
கிளைகளை
மடக்கி வைத்தேன்,
தூறல் கண்டால்
துளிர்துவிடலாமென்று ...
பாலுட்டா பாவியாக
தாய் - தன்னை
கூறாமல்
தவிர்த்து விட்டேன்
விதைகளை...
உள்ளிருக்கும்
வேர்களை
என்ன செய்ய
உயிர்பிக்க...

எழுச்சி


சிந்திய கண்ணீர்
சேமித்தால் போதும்,
சிந்து நதியில்
சிக்கதா முத்து - என்
செம்மண்ணில்
விளையும்..,
சிந்தித்து பார்...,
மணல் குவித்து
மண்டியிட்டு
மன்றாடுகிறாயே
காவேரியில்...,
கால்வாயை வெட்டு
தலை நகரில்
உன்னும் போது
உணர்வார்கள்
கரிக்கும் - நெல்
கண்ணீரில்
விளைந்ததேன்று ...

பிரிவு


பிரிவின்
கொடுமையை
உணர்கிறேன்...
உன் - நினைவை
சுமந்த
ஒவ்வொறு
நிமிடமும்...
மறைந்து விடு
பெண்னே...,
இமை மூடா
வலிக்கிறது
கண்கள்...,
தங்க மணல்
தரணிக்கு
தவழ்த
நிலவோடு - நின்
பாதமும்...,
விழ்ந்த
அலைகளில்
இதையங்கள்
தடுமாறி
இடம்மாறி
திரும்பினவோ...,
உன்னோடு
சேரும் வரை
உலகில் தேவை
ஒன்றும் இல்லை...,
உன்னை தவிர
உலகே தேவை
இல்லை...,


அந்தரத்தில்
அழகாக சிரிக்கின்றாய் - நிலவே ...,
நி - யாரையும்
காதலிக்கவில்லையா?...,

நம்பிக்கை


பிரிவென்பது ஏது...,
"ஒன்று சேர்த்து விடுவோம்."
காதல் வாழும்
கடற்கரையில்...,
அலைகளோடு,
அலைகளாக...,

வறுமை

தேயும் நிலவு கூட
திரும்பும்
திங்களுக்கு திங்கள்
தேன் நிலவாக ..,
கதிரவன் கரையும் நேரம்
என் உடலோடு
உடன் பிறந்த - என்
நிழல் கூட மறையும் ...,
என்றுதான் நீங்குமோ?
மண்ணை விட்டு பிரிந்தால் தான்
என்னை விட்டு
மறையுமோ!!!


எந்தன் வறுமை....,

தொட்டு கொடு
அஸ்தியை,
துளி கண்ணீரால் ...,
புனிதமாகட்டும்
எந்தன் காதல்...,

ஆசை

பூத்து குலுங்குகின்றன
பட்ட மரத்திலும்
ஒட்டி கொண்டிருக்கும்
பனி துளியாய்....
எங்களின் ஆசைகள்....

வரம் கொடு

ஒரு கோடி இரவுகள்
மடி தூங்க ...
கலைத்து விடாதே
கனவுகளை....