Tuesday, July 14, 2009

செய்யா உதவி

மாலை வந்தால் மரணம்,
மண்டியிட்டு கேட்டது -
" பறித்து விடு
பறித்து எடுத்து விடு"
- ஏதாவது ஒரு தேவதையின்
கூந்தலில் சேர்..,
"என்னையும்
புண்ணியமடைய செய் ... "
தென்றலில் -
இதழ்கள் பேசியது ....,

தேவதைக்கு எங்கு செல்ல ...
"ஒருத்தி இருந்தாள்,
உயிரில் கலந்தாள்,
சுவடுகள் மட்டும் தந்து,
பாதை விலகி நின்றால் ...,

நினைவுகளோடு - நான்
நிலவாகவே - அவள்,
பாவியானேன்...., "

- இவன் கைபட்டால் ...,

உன் தேகம் கருக்கும்,
நீ - யும், என்னை போலவே
நன்றாக சிரிப்பாய்,
நடை பிணமாகவே ...

மன்னித்து விடு என்னை ......

1 comment: