Saturday, January 29, 2011

காதலோடு நான் மட்டும்

காலம்
நம்மை
பிரித்தாலும்,
என்றாவது
சந்திப்போம்
சொர்க்கத்தில்..,

அன்றும்
உன் - நினைவில்...,

கேள்வி

உயிரோடு
என்னை கொள்ள
உறவாடி வந்தாயோ?
நீங்காத துயரமக்கி
என்னைவிட்டு
நீங்கிவிடுவாயோ...,

நிஜம்

ஒவொரு
நிலவிலும்
என்னவளின்
முகம் மட்டும்
தெரிகிறதே...,
என் மூடிய
போர்வையின்
ஒவ்வொறு
இழையின்
இடையிலும்....,

Friday, January 28, 2011

வலியோடு நான்

உடலை விட்டு உயிர் பிரிந்தால்
உறங்கி விடும்
எந்தன் கண்கள்,
உறங்க மறுப்பதேனோ...,

மனம் சூழ்ந்த - உன்
நினைவுகள்
மறைவது கண்டு,
உறைந்து நின்ற இதயத்தில்
உருகி ஓடும்
கண்ணீர் துளிகள்
நீ - அழுவதலோ?...,

மறையாமல் தொடங்கும்
உன் நினைவுகள்
என் சோகத்தை
மறைத்தாலும்
முடியவில்லை - எந்தன்
கண்களுக்கு...,

மௌனமாய் நான் இருக்கும் - நேரம்
மன்றாடி வேண்டுகிறேன்
முடியுமா? தெரியவில்லை...,

உன்னோடு
வாழ்ந்துவிட ஆசை,
உன் நிழலில்
வாடிவிட ஆசை,
நிறைவேறா ஆசையில்
நின்று விடுமோ?...,

பெறாத பிள்ளைக்கு - பேர் சூட்டி
வளர்த்திட்ட சோகமென்ன ...,
விடியல் வருமுன்னே
கலைந்து விடும்
கனவாகவே...,

விடிந்தாலும் உறங்காமல்...
உன்னோடு வாழ்ந்தகாலம்
மறந்தாலும் மறையாதே,
இவ்வுடல் என்னை விட்டு
பிரிந்தாலும் மறையாதே...,
நான் செய்த குற்றமென்ன...,

உன்னோடு வாழ்ந்த காலம்
என்னில்
கனவாய்தான் போகுமோ?...,

ஆசை

இன்னமொரு புதிய உலகம்...,
அதில் என்னோடு நீ-மட்டும்...,
எதிர்பே இல்லா உலகில்
காதலர்களாய்
நாம் மட்டும்...,
ஒருவரை ஒருவர்
விழுங்கிக்கொள்வோம்
பார்வை -யினாலே...,

யாரும் இல்லா உலகில்
ஜென்ம ஜென்மமாய்
வாழ்ந்திடுவோம்
குழந்தைகளாகவே ...,

என் காதலி

மயக்கும் உன் விழிகள்
மௌனமாய் என்னை
கொள்ளுதடி...,

நீ - சிரிக்கும் அந்த
ஒவ்வொறு சிரிப்பிலும்,
ஏதோ ஒரு மாற்றம்
எனக்குள்ளே தோன்றுதடி...,

அன்று ஒருநாள்
என்னருகே -
அந்த அழகே
இயற்கை அழகை
ரசிக்கிறதே - என்று
இயற்கையே,
வெட்கத்தில் முழ்க...,

பூலோக பெண்களே,
வெட்கும் வகையில்
நேராக வந்துவிட்டயோ
என் கண்களுக்கு
விருந்தாய்!
தேவலோக தேவதையாக...,

அன்பே,
ஆயிரம் பேரின்
கனவு கன்னிதான் - நீ
வானுலகை வட்டமடிக்கும் பொது ...,

கவிதை எழுதும் போதும் கூட,
உன்னை வர்ணித்தல் தான்
இனிமை சேரும்,
காதலிக்கும் இளைஞ்சர்களுக்கு,

அந்த அழகு நிலவே,
உன்னை கண்ட நாள் முதல்,
இன்னும் அம்மாவாசையகவே...,

நிலவிற்கும்,
நெருப்பிற்கும்
பிறந்தவளே!
என்னை
நிம்மதியாக
இருக்க விடுவாயா?

நீயும் என் நினைவும்

அழகு பதுமையே
வாய் திரந்து பேசு...,

ஊமையாகிவிடும்,
உன்னருகே,
எனக்கே சொந்தம்
மௌனம் மட்டும்...,

உனக்கென்ன
என் விழிகள் தானே
வெட்கத்தில் மூழ்கும்...,
நீ - என்னை விழுங்கும் வரை...,

செவ்விதழ் சிரிப்போடு,
சிதறும் முத்துக்கள்
எந்தன் சிந்தனைக்கு
தீபமாய்,
உன் நிழலைகூட
படமாக்கும் -என் நினைவோ
உன் ஒவ்வொறு அசைவையும்
மீண்டும் மீண்டும் ...,

நீ -யில்லா நேரத்தில்,
அந்த - அழகான
நாட்களின்
நினைவோடு...,
தனிமை - யில் என்னை
தவிக்க விடுகிறாயே....,