Friday, January 28, 2011

வலியோடு நான்

உடலை விட்டு உயிர் பிரிந்தால்
உறங்கி விடும்
எந்தன் கண்கள்,
உறங்க மறுப்பதேனோ...,

மனம் சூழ்ந்த - உன்
நினைவுகள்
மறைவது கண்டு,
உறைந்து நின்ற இதயத்தில்
உருகி ஓடும்
கண்ணீர் துளிகள்
நீ - அழுவதலோ?...,

மறையாமல் தொடங்கும்
உன் நினைவுகள்
என் சோகத்தை
மறைத்தாலும்
முடியவில்லை - எந்தன்
கண்களுக்கு...,

மௌனமாய் நான் இருக்கும் - நேரம்
மன்றாடி வேண்டுகிறேன்
முடியுமா? தெரியவில்லை...,

உன்னோடு
வாழ்ந்துவிட ஆசை,
உன் நிழலில்
வாடிவிட ஆசை,
நிறைவேறா ஆசையில்
நின்று விடுமோ?...,

பெறாத பிள்ளைக்கு - பேர் சூட்டி
வளர்த்திட்ட சோகமென்ன ...,
விடியல் வருமுன்னே
கலைந்து விடும்
கனவாகவே...,

விடிந்தாலும் உறங்காமல்...
உன்னோடு வாழ்ந்தகாலம்
மறந்தாலும் மறையாதே,
இவ்வுடல் என்னை விட்டு
பிரிந்தாலும் மறையாதே...,
நான் செய்த குற்றமென்ன...,

உன்னோடு வாழ்ந்த காலம்
என்னில்
கனவாய்தான் போகுமோ?...,

No comments:

Post a Comment