வல்லரசை
நோக்கி
இந்தியா...,
இன்னும்
குடில் இன்றி
தெரு புழுதியிலே
புரளும் புழுக்களோடு
புழுக்களாய்....,
உடுத்தினால் தானே
மாற்ற - இன்னும்
மாற்றக்கூட
வழி இல்லாத,
இடுப்பு கயிறோடு - மட்டும்
எத்தனையோ
மக்கள்...,
அடித்து செல்லும்
ஆங்கில - மோகத்தில்
அம்மா - என்றால்
அழுகிறாள்...,
கஞ்சிக்கே
வழி யில்லா
அவளுக்கு - எப்படி
பால் சுரக்கும்?.....,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment